ஆரியம் திராவிடம் எனும் இனக்கோட்பாடு உருவாக்க பட்டதே இந்தியாவின் பண்பாடு என்பது வெளியில் இருந்து வந்தது என்று மக்கள் நம்ப வேண்டும் என்ற காரணுத்துக்காக தான் .இதை முதன் முதலில் உருவாக்கியவர் மாக்ஸ்முல்லர் .ஆனால் இன்றோ அது பொய் என்று நிறுவி கொண்டு இருக்கிறார்கள் .ஏனென்றால் ஆரியர் வந்ததுக்கு எந்தவொரு ஆதாரமும் இதுவரை கிடைக்க வில்லை .இந்த கோட்பாட்டை கைவிட்டால் நமது உண்மை வரலாறு எழுதப்படும் என்பது திண்ணம் .
நாத்திகம் ஆத்திகம்
இந்த கோட்பாடு தமிழகத்தில் மேலும் இரு பிரிவை உருவாக்கியது என்பது தான் உண்மை .திராவிடர்கள் நாத்திக்கர்கள் என்றும் ஆரியர்கள் கடவுள் நம்பிக்கை உடைய ஆத்திகர்கள் என்றும் திராவிட இயக்கம் பரப்பியது என்றே சொல்லலாம் .சிறு தெய்வ வழிபாடுகள் யாருடையது என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை என்பது தான் உண்மை .
தமிழகம் மட்டும் இல்லை இந்தியாவின் பண்பாடு என்பதே பன்மை தன்மை கொண்டது தான் .
குமரிகண்டம்
குமரிகண்டம் இருந்தது என்பதற்கு இலக்கியத்தில் சில குறிப்புகள் உள்ளன.அந்த இடம் கடல்கோளால் அழிந்தது என்று சொல்லவும் படுகிறது.
தமிழகத்தில் யார் ஆரியர் என்று கேட்டால் பிராமணர்களை சொல்லுகிறார்கள் .இது தமிழகத்தில் மட்டும் இல்லை இந்தியா முழுவதும் இதே நிலைதான் .வட இந்தியாவிலும் பிராமணர்களே ஆரியர்கள் .
இதில் ஒரு முரண்பாடு இருக்கு வெளியில் இருந்து வந்தவர்கள் பிராமணர்கள் மட்டும் தானா ? என்ற கேள்வியும் நம்முள் எழுகிறது .குறைவானா மக்கள் உள்ள பிராமணர்கள் எவ்வாறு இந்தியா முழுவதும் இருக்கும் திராவிடர்களை வெற்றி கொண்டார்கள் என்றால் அதற்க்கு பதில் நமக்கு கிடைக்க வில்லை .
சமஸ்க்ரிதத்தில் ஆரியர் என்றால் மரியாதைக்குரியவர் என்று பொருள் .ஆரியர்கள் வந்து தான் இந்து மதத்தை உருவாக்கினார்கள் இந்தியாவின் பண்பாட்டை உருவாக்கினார்கள் என்று சொல்லபடுகிறது .இந்து மதம் உருவாக்க பட்ட போது தான் சாதி உருவாக்க பட்டது என்றும் சொல்லுகிறார்கள் .ஆனால் வர்ணத்தில் இருந்து தான் சாதி வந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை .ஏனென்றால் ஒரே சாதிக்குள் பல கூட்டங்கள் இருக்கு .இது எவ்வாறு பிரிந்தது என்பதற்கும் விளக்கம் இல்லை .இவ்வாறு பல முரண்பாடுகளை கொண்டது தான் இந்த ஆரிய திராவிட இன வாதம் .
இந்தியாவின் பண்பாடு உருவாகி வந்த காலத்தில் இந்து மதமும் தானாக உருவாகி வந்தது.சாதிகள் வர்ணமாக தொகுக்க பட்டது .இந்தியாவின் அல்லது இந்து மதத்தின் அடிப்படை என்னவென்றால் அது குலதெய்வ வழிபாடு தான் .
சமணமும் பௌத்தமும் தோற்ற வரலாறு
இந்து மதத்தை ஆரியர்கள் உருவாக்கினார்கள் .அதை எதிர்த்து உருவானது தான் சமணமும் பௌத்தமும் என்று சொல்ல படுகிறது .இந்த மதங்களை அழித்தது இந்து மதம் என்ற கருத்தும் உண்டு .கழுவேற்றி சமணர்களை கொன்று விட்டார்கள் என்று ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்லுகிறார்கள் .ஆனால் சமண பௌத்த ஏடுகளில் ஒரு குறிப்பு கூட இல்லை என்பது தான் உண்மை .இந்த மதங்கள் இந்திய சமுதாயத்தில் இருந்து குறைந்ததுக்கு இந்த குலதெய்வ வழிபாடுதான் காரணம் .சமண மதத்தில் இருந்து கொண்டே குலதெய்வ வழிபாடுகளை செய்து கொண்டு இருந்திருக்கிறார்கள் இந்தியர்கள் இன்று கிருஸ்துவத்தில் இருந்து கொண்டே குலதெய்வ வழிபாடு செய்யும் சில சமுதாயங்கள் போல .
இந்த குலதெய்வ வழிபாடு வெறும் வழிபாடாக இல்லாமல் அன்று தனது சொந்தங்கள் எல்லோரும் சந்தித்து கொள்ளும் ஏற்பாடாக இருப்பதால் தான் இந்த வழிபாடு இன்னும் நிலை பெற்று இருக்கிறது .சமணத்திலும் ,பௌத்தத்திலும் கடவுள் என்று ஒருவர் இல்லை .இந்த கருத்து இந்து மதத்தில் அத்வைதம் என்று சொல்ல படுகிறது.
முடிவுரை
ஆரியம் திராவிடம் எனும் இனகோட்பாடு ஆரம்பத்தில் இரண்டு இனங்களாக பிரித்து (அதுவும் பிராமணர்கள் மட்டுமே ஆரியர்கள் ) ,அதை இந்து மதத்தில் இணைத்து ஒரு முரண்பட்ட கருத்தாக்கத்தை உருவாக்கி இருக்கிறார்கள் .இதை உருவாக்கி பிரச்சாரம் செய்து வந்த காலத்திலேயே இதை அம்பேத்கார் மறுத்து வந்தார் .அம்பேத்காரின் கருத்து இந்து மதம் சாதியை காக்கிறது என்பது உண்மை தான் ஆனால் ஆரியம் என்ற ஒரு இனம் இதற்க்கு காரணம் என்பதை நம்ப மறுத்தார் .ஆரியம் என்ற கோட்பாடு வர வர வலுவிழுந்து போய் கொண்டு இருப்பதுதான் உண்மை .இந்தியர்களின் பண்பாடுகளில் உள்ள நன்மை தீமைகள் அனைத்துக்கும் இந்தியர்கள் தான் காரணமே இல்லாமல், வெளியில் இருந்து ஒரு கூட்டம் வந்து இதை உருவாகினார்கள் என்ற கருத்து வலுவிழுந்து விட்டது என்பதே உண்மை.
பின் குறிப்பு :
இது என் முதல் இடுக்கை இதில் தவறுகள் இருப்பின் சுட்டி காட்டுமாறு கேட்டு கொள்கிறேன் .
இங்கு இருந்து தான் தமிழக மற்றும் இந்தியாவின் வரலாறு ஆரம்பிப்பதாக கருதப்படுகிறது .
ஆரியம் திராவிடம் எனும் இனக்கோட்பாட்டை விட்டு வெளியில் வரும் போது தான் இந்தியாவின் உண்மையான வரலாறு நம் கண்முன் தெரியும் .
ஆரியம் திராவிடத்தின் முரண்பாடு

Inga kommentarer:
Skicka en kommentar